ஷூ அணிந்து ஸ்ரீரங்கம் கோயில் கோபுரத்தில் ஆய்வு செய்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷுக்கு இந்து திருக்கோயில் மீட்பு இயக்க நிறுவனர் கடும் கண்டனம். பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஷூ அணிந்து ஸ்ரீரங்கம் கோயில் கோபுரத்தில் ஆய்வு செய்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷுக்கு இந்து திருக்கோயில் மீட்பு இயக்க நிறுவனர் கடும் கண்டனம். பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
திருச்சி ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயில் கிழக்கு கோரத்தில் பராமரிப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது.இந்த பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கடந்த சனிக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது, ஸ்ரீ ரங்கம் கோயில் கிழக்கு கோபுரத்தில் அமைச்சர் ரமேஷ் காலில் ‘ஷூ’ அணிந்தபடி பராமரிப்பு பணிகளை பார்வையிட்ட வீடியோ தற்பொது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து வழக்கறிஞர் மற்றும் நோட்டரி பப்ளிக் (மத்திய அரசு) இந்து திருக்கோயில் மீட்பு இயக்கம் நிறுவனர் மகேஸ்வரி வையாபுரி கூறுகையில், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீ ரங்கம் கோயில் மிகவும் புனிதமான ஸ்தலம். இக்கோயிலில் அமைச்சர் `ஷூ’ அணிந்து கொண்டு கோபுர பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவீதிச்சுற்றிலே கூட பெரியவர்கள் காலணி அணிந்து செல்ல மாட்டார்கள்.இந்து சமய அறநிலைத்துறை அமைச்சருக்கு இது தெரியாதா? (அமைச்சரின் அப்பா ஒரு கோயிலின் அர்ச்சகர் என்பது குறிப்பிடத்தக்கது) கோபரத்தில் காலணி அணிந்து ஆய்வு செய்தது பக்தர்களின் மனதை புண்படுத்தி உள்ளது .
அமைச்சர் பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இதுகுறித்து அமைச்சர் விளக்கமும் அளிக்க வேண்டும்’இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் கவனம் செலுத்த வேண்டும்.நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு அமைச்சரை வன்மையாக கண்டிக்கிறோம் என்றனர்.

