திருச்சி அரியமங்கலத்தில் பிரபல லாட்டரி வியாபாரியிடம் வின்னிங் பணம் பெரும் லாட்டரி வியாபாரி கைது; ஒருவர் தப்பி ஓட்டம்.
திருச்சி அரியமங்கலத்தில் பிரபல லாட்டரி வியாபாரியிடம் வின்னிங் பணம் பணம் பெரும் லாட்டரி வியாபாரி கைது; ஒருவர் தப்பி ஓட்டம்.
திருச்சி அரியமங்கலம் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜான் துரைராஜ் மற்றும் போலீசார் அரியமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை மமேற்கொண்டனர். அப்போது அந்த மோட்டார் சைக்கிளில் வந்த பாலக்கரை கெம்ஸ்டவுன் பகுதியைச் சேர்ந்த குணா என்ற குணசேகரன் (வயது 57) கொட்டப்பட்டு இந்திரா நகரை சேர்ந்த சாலமோன் (வயது 62 )ஆகிய இரண்டு பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் அங்கிருந்து குணசேகரன் தப்பி சென்று விட்டார்.
இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிளில் சோதனை செய்த போது அதில் லாட்டரி டிக்கெட் 2 செல்போன்கள், ரூ 120 இருப்பது தெரியவந்தது. இணையடுத்து அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் சாலமோனை கைது செய்து,மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.மேலும் தப்பி ஓடிய குணசேகரனை தேடி வருகின்றனர்.தப்பிய குணா என்கிற குணசேகரன் திருச்சியில் இரண்டெழுத்து, மூன்றெழுத்து கொண்ட பிரபல லாட்டரி வியாபாரியிடம் தான் வின்னிங் பணம் (அதாவது ஆன்லைனில் பணம் கட்டியவர்களுக்கு பரிசு விழுந்தால் அவருக்கு அந்த தொகை தரும் முதலாளி) பணி புரிகிறார் என கூறப்படுகிறது.

