வியாபாரிகளை மனவேதனைக்கு உள்ளாக்கி வரும் வணிகவரித்துறையின் நடமாடும் குழுவினர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்ட பழைய இரும்பு வியாபாரிகள் சங்க தலைவர் விக்னேஷ் ரவி முத்துராஜா வேண்டுகோள்.

சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு கூடுதல் அபராத தொகை விதிப்பதை கைவிட வேண்டும் பழைய இரும்பு வியாபாரிகள் சங்கத் தலைவர் விக்னேஷ் ரவி முத்துராஜா வேண்டுகோள்.
திருச்சி மாவட்ட பழைய இரும்பு வியாபாரிகள் சங்கத் தலைவர் விக்னேஷ் ரவி முத்துராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக இவணிகவரித்துறையின் நடமாடும் குழு (ரோவிங் ஸ்குவாட்) அதிகாரிகள் பழைய இரும்பு கொண்டு செல்லும் லாரி மற்றும் வாகனங்களை வழிமறித்து கொள்முதல் பில் கேட்டு லாரி ஓட்டுனரின் உரிமங்களை பறித்து வைத்துக் கொண்டு மிரட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். எடை மேடைக்கு செல்லும் சரக்கு வாகனங்களையும் பாதியிலேயே மறிப்பதும் நடக்கிறது. வருடத்துக்கு ரூ. 20 லட்சத்துக்கு குறைவாக வரவு, செலவு செய்யும் சிறு வியாபாரிகளின் டாடா ஏசி வாகனங்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. இரும்பு வியாபாரிகளை திருடனை பார்ப்பது போல் பார்க்கிறார்கள் ஈ வே பில்லில் ஏதேனும் சிறு எழுத்துப் பிழை இருந்தால் அதற்கு ரூ. 500 அபராதம் செலுத்தினால் போதும் என ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கூறினர். ஆனால் இப்போது அது போன்ற பிரச்சனைகளுக்கு வாகனத்தில் உள்ள சரக்குக்கான வரியை 200 சதவீதம் அபராதமாக அதாவது, ஸ்பாட் ஃபைன் கட்டச் சொல்லியும், யூசர் ஐ.டி., பாஸ்வோர்ட் கேட்டும் வியாபாரிகளை மனவேதனைக்கு உள்ளாக்கி வருகின்றனர். இதனால் சிறு பழைய இரும்பு வியாபாரிகள் தொழில் செய்ய முடியாத அளவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை மாவட்ட கலெக்டர் மற்றும் பொறுப்பு அமைச்சர் கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுத்து திருச்சி மாவட்ட பழைய இரும்பு வியாபாரிகளை காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

