Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி 14 வது வார்டில் படிப்பகத்தை குப்பை கிடங்காக மாற்ற மாநகராட்சி ஆணையர் ஆய்வு.அதிமுக கவுன்சிலர் வார்டு என்பதால் தகவல் கூட தெரிவிக்காத மாநகராட்சி கமிஷனர்.

0

'- Advertisement -

Ad banner

திருச்சி மாநகராட்சி 14வது வார்டு, அரபிகுள தெருவில் அமைந்துள்ளபொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள படிப்பகத்தை மாநகராட்சி ஆணையர் இன்று திங்கட்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்து,சுற்றிலும் பொதுமக்கள் வாழும் அந்த இடத்தை குப்பைக் கிடங்காக மாற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

மக்கள் பயன்பாட்டில் உள்ள இடத்தை, பொதுமக்களின் கருத்துகளையும், பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினரின் ஆலோசனைகளையும் பெறாமல் தன்னிச்சையாக குப்பைக் கிடங்காக மாற்ற முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

 

இதுபோன்ற முடிவு அப்பகுதி மக்களின் சுகாதாரத்தையும்,சுற்றுச்சூழலையும் கடுமையாக பாதிக்கும். மேலும், பொதுமக்களிடையே அச்சத்தையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது

 

இந்த வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் அரவிந்தன், மேயர், துணை மேயர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் எந்தவித ஆலோசனையும் நடத்தாமல், மாநகராட்சி ஆணையர் தன்னிச்சையாக செயல்படுவது ஜனநாயக நடைமுறைகளுக்கு எதிரானது.

 

எனவே, இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற்று, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கூறியுள்ளனர்.மாநகராட்சி பொதுமக்கள் நலனுக்காக தான் செயல்பட வேண்டும் – ஆனால், மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும் மாநகராட்சி ஆணையரின் இந்த போக்கிற்கு எங்களது வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறோம் என அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி பொதுமக்கள் நலனுக்காக தான் செயல்பட வேண்டும் திமுக கவுன்சிலர் அதிமுக கவுன்சிலர் வார்டு என பாகுபாடு பார்க்கக் கூடாது எனவும் அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் கூறியுள்ளார்.பொதுமக்களில் எதிர்ப்பை சந்தித்தால் திருச்சி மாநகராட்சி பின்னடைவை தான் சந்திக்கும்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.