யாதவ மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய அமைச்சர் நிர்மல்குமார் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.பாரத முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் பாரதராஜா அறிக்கை

பூலித்தேவனின் சேனாதி பதி என முதல் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோனின் வரலாற்றினை திசை திருப்பும் அமைச்சர் நிர்மல்குமார்.
வரலாற்று பிழையான கருத்தை வாபஸ் பெற பாரத முன்னேற்றக் கழகம் வலியுறுத்தல்
யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
முதல் சுததிர போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழா( குருபூஜையாக) ஜூலை 11 ம் தேதி தமிழகம் மட்டுமல்ல கேரளா- மகராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மிகச்சிறப்பாக எழுச்சியாக கொண்டாடப்பட்டது.
முதலில் முதல் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோனுக்கு புகழஞ்சலி செலுத்திய இந்திய குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக கவர்னர் அர்லேகர்,தமிழக முதல்வர் ஜோசப் விஜய்,முன்னாள் முதல்வர்கள் மு.க.ஸ்டாலின்,எடப்பாடி கே.பழனிச்சாமி ,தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ,மத்திய அமைச்சர் எல்.முருகன்,தமிழக அமைச்சர்கள் ராஜ்மோகன் ,ராஜீவ் ,
டி.கே.பிரபு,மதன்ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி கருணாநிதி,துரை வைகோ சர்வக்கட்சி தலைவர்கள் பா.ஜ.க நயினார்.நாகேந்திரன்,நாம் தமிழர் சீமான்,விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன், ம்.தி.மு.க.வைகோ, த.மா.க.ஜி.கே.வாசன், பார்வர்டு பிளாக் திருமாறன் ஜி சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர்கள்,மக்கள் பிரதிகள் ,யாதவ மற்றும் பல்வேறு சமுதாய தலைவர்கள், உள்பட ஏராளமானோர் மாவீரர் அழகுமுத்துக்கோன் சிலைகளுக்கும்.உருவப்படங்களுக்கும் மாலையிட்டு மரியாதை செய்து வீரமுழக்கமிட்டுளளனர்.
இந்நேரத்தில் தமிழக அரசு மற்றும் சர்வக்கட்சியினருக்கும் யாதவர் சமுதாயம் சார்பில் நன்றியை காணிக்கையாக்குகின்றோம்
அதே சமயம். பல்வேறு காலமாகவே சிலர் முதல் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோனின் வீர வரலாற்றை திசை திருப்ப முயற்சித்து தோல்வியை தழுவி உள்ளனர் இதனை யாதவ சமுதாயம் சட்டரீதியாகவே வென்றுள்ளது
இந்நிலையில் மாவீரருக்கு புகழஞ்சலி செலுத்திய சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் முதல் சுதந்திரபோராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோனை பூலித்தேவரின் சேனாதிபதி வீரர் என்று குறிப்பட்டு ஒரு கல்வெட்டுடன் (A I தொழில்னுட்பத்தில் திருத்தம் செய்தது- இந்த கல்வெட்டு எங்கும் இல்லை) செய்தியை வெளியிட்டது வேதனையை தருகின்றது
சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் வரலாற்றினை திசை திருப்பும் நோக்கில் தெரிந்தே இந்த தவறை செய்தாரா ? அல்லது பலிகடா ஆக்கப்பட்டாரா? என்பதனை முதலில் அவர் விளக்க வேண்டும் . .
அத்தோடு இல்லாமல் இந்த வரலாற்று தவறுக்கு வருத்தம் தெரிவித்து அமைச்சர் நிர்மல்குமார் செய்தி வெளியிட வேண்டும்..
த.வெ.க அரசுக்கு களங்கம் கற்பிப்பதோடு மட்டுமில்லாமல் யாதவ மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய இந்த கருத்தை உடனே அமைச்சர் நிர்மல்குமார் வாபஸ் பெற வேண்டும் என யாதவர்களின் சார்பில் வேண்டுகின்றோம்.
இவ்வாறு தமது செய்தி குறிப்பில் பாரதராஜா யாதவ் தெரிவித்துள்ளார்

