சுனாமி பிசினஸ் என்றால் என்ன?
வெளிநாடுகளில் இருந்து கூலிப்படையினர் (குருவிகள்) மூலமாக தங்கம் கடத்தி வரப்படும். அந்தத் தங்கத்தை இடைத்தரகர்கள் அல்லது கடத்தல்காரர்கள் தங்கள் கைகளுக்கு மாற்றும்போது, திட்டமிட்டு அதனை மற்றொரு கும்பல் திருடிக்கொள்ளும்..
இது சட்டவிரோத வேலை என்பதால், பாதிக்கப்பட்டவர்கள் சுங்கத்துறை (Customs) அதிகாரிகளிடமோ அல்லது போலீசாரிடமோ புகார் கொடுக்க முடியாது. இதைத்தான் ‘சுனாமி பிசினஸ்’ என்று குற்றவாளிகள் குறிப்பிடுகிறார்கள்.
இந்த சுனாமி பிசினஸ் கொடி கட்டி பறந்தவர்கள் திருச்சியில் சிலர்,அவர்கள் அனைவரும் கட்சி போர்வையில் பாதுகாப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதில் சீனியர் காங்கிரஸ் திருச்சி மாநகர பிரமுகர்.
இவரிடம் இருந்து வளர்ந்தவர்கள் சிந்தாமணி பகுதியை சேர்ந்த இருவர். இந்த இருவரும் அதிமுகவில் மாநகர அணி செயலாளர் பதவிக்கு அப்போதைய மாவட்ட செயலாளர் ஜெ..சீனியிடம் 10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை கொடுத்து மாநகர அம்மா பேரவை செயலாளர் மற்றும் ஒரு பேரவை செயலாளர் பதவியை பெற்றனர்..அம்மா பேரவை மாவட்ட செயலாளராக ஆவின் கார்த்திகேயன் அறிவிக்கப்பட்டதால் அப்பதவிக்கு பணம் கொடுத்தவர் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அவருடன் பணம் கொடுத்த மற்றொரு நபர் அதிமுகவிலிருந்து விலகினார்.மறுபடியும் மாநகர செயலாளராக இருந்த சீனிவாசனிடம் கூறி பகுதி செயலாளர் பதவியை பெற்றார்.அதன் பின்பு தனது தொழில் சிறப்பாக செயல்பட தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து உள்ளார்.இவரை எப்போதும் தொடர்பு கொள்ள முடியாது.இந்த செய்தி வெளியிடுவதாக கூறிய பின்பு செய்தி வெளியிட்டால் ஆனந்தை காலி செய்து விடுவேன்,அவன் மீது வழக்கு பதிவு செய்து அலைய விடுவேன் எனவும் மிரட்டி உள்ளார் இந்த நபர்.தற்போது இந்த நபர் அந்த தொழிலை விட்டுவிட்டு ரியல் எஸ்டேட்டில் ஈடுபட்டுள்ளதாக கூறி வருகிறார்.
தற்போது இந்த சுனாமி பிசினஸில் கொடி கட்டி வருபவர் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் விசுவாசியின் பினாமி ஆவார்.
இந்த நான்கு நபர்களிடமும் எப்போதும் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உடன் இருப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது.
(இந்த நான்கு பேரும் முறைகேடான முறையில் தங்கும் கடத்தி வரும் நபர்களிடம் தங்கத்தை பறிப்பதால் யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை என்பதால் இவர்களின் மீது எந்த வழக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது)
ஏர்போர்ட்டில் நகை கடை கடத்தி வரும் நபரை சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வைத்து அந்த தங்க நகைகளை பறித்துக் கொண்டு அந்த குருவியாக வந்த நபரை அடித்து விரட்டுவது இவர்களுக்கு வாடிக்கை.
எனது மீது கொலை மிரட்டல் கொடுத்த புகார் அளிப்பதாக கூறிய நபர் ஒரு முன்னணி பத்திரிக்கையாளர் உதவியுடன் புகார் அளிப்பதாக கூறியுள்ளார். அப்படி அவர் புகார் அளித்தால் அடுத்த சுனாமி பிசினஸின் போது தகுந்த ஆதாரத்துடன் வீடியோ வெளியிடப்படும்.அதற்கு முன் என் உயிருக்கு எந்த ஆபத்து ஏற்பட்டாலும் அந்த நண்பர் தான் இதற்கு முழுக்க காரணம் .
திருச்சியில் எங்கு 3 ம் நம்பர் லாட்டரி ஓடுகிறது, வின்னிங் யார் தருகிறார் /கஞ்சா விற்பனை யார் செய்கிறார்கள் / இரவு 10 மணிக்கு மேலும் காலை 12 மணிக்கு முன்பும் கள்ள சந்தையில் மது எங்கு விற்பனை செய்யப்படுகிறது என அனைத்து விபரமும் ஆதாரங்களுடன் வெளியிடப்படும்.

