Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சத்திரம் பேருந்து நிலைய மாநகராட்சி பொது கழிப்பிடத்தில் அடாவடி வசூல்.

0

'- Advertisement -

Ad banner

நேற்று மாலை சமயபுரம் கோயில் செல்வதற்காக கரூரில் இருந்து குடும்பத்தினர் சத்திரம் பேருந்து நிலையம் வந்து இறங்கினர் .

பின்னர் சமயபுரம் பஸ் நிறுத்தம் அருகிலுள்ள மாநகராட்சி பொதுக் கழிப்பிடத்திற்கு சென்றபோது அங்கிருந்த நபர் ரூ. 15 கேட்டுள்ளார்.

ஐந்து ரூபாய்க்கு மேல் எங்குமே கிடையாதே என கேட்டதற்கு,வேண்டுமென்றால் உள்ளே செல் இல்லை என்றால் இடத்தை காலி பண்ணு என திமிராக பேசி உள்ளார் அந்த நபர்.பின்னர் 15 ரூபாய் கொடுத்து அவரது மனைவி உள்ளே சென்று பொது நாற்றம் தாங்க முடியவில்லை,

சுகாதாரமும் இதை சுத்தமாகவும் இல்லை .வெளியில் கட்டண விவரங்கள் குறித்த போர்டு எதுவும் வைக்கவும் இல்லை.

 

இது குறித்து கேட்டபோது அந்த நபர் எங்கு வேண்டுமானாலும் சென்று கூறிக் கொள்ள மேலும் தெனாவட்டாக கூறியுள்ளார்.

 

பாதிக்கப்பட்ட அந்த நபர் நம்மிடம் தொடர்பு கொண்டு இப்படி அடாவடி வசூல் செய்வது குறித்து புகார் கூறினார்.

இது வெளியூரிலிருந்து வரும் பயணிகளிடம் திருச்சி மாநகராட்சி குறித்து அவர் பெயரை ஏற்படுத்தும் எனவே திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.