Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அரியமங்கலத்தில் பழைய பிளாஸ்டிக் குடோனில் காலை பயங்கர தீவிபத்து. 2 மணி நேரம் போராடி தீ அணைப்பு.

0

'- Advertisement -

திருச்சி அரியமங்கலத்தில் பழைய பிளாஸ்டிக் குடோனில் இன்று பயங்கர தீவிபத்து.2 மணி நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்.

Ad banner

ரூ 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்.

திருச்சி அரியமங்கலம் கணபதி நகரில் நடேசன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் உள்ளூர் அரியமங்கலத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் கடந்த ஒரு வருடமாக பழைய பிளாஸ்டிக் குடோன் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த பகுதியில் இருந்து கரும்புகை வெளிவந்ததை அறிந்த அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது தரம் பிரித்து வைக்க சிமெண்ட் தரையில் குவியிலாக வைக்கப்பட்டு இருந்த பழைய பிளாஸ்டிக் பொருட்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது

காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவியதுடன் விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புவை வெளியானது.

TVK ad

இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் தீயணைப்புத் துறையினர் 2மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள்கொண்டு வந்தனர்.

இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தீபத்தில் சுமார் ரூ 10 லட்சம் மதிப்பிலான பழைய பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சாம்பலானது.

அதிகாலையில் நடந்த இந்த தீ விபத்து சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டதுடன், நச்சுப்புகை வெளியாகி மக்கள் சிரமத்திற்கு ஆளாகினார்கள்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.