Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் ரத்து

0

'- Advertisement -

திருச்சியில் நாளை மறுநாள் வியாழக்கிழமை 09.07.2026 அன்று ஒருநாள் மட்டும் குடிநீர் விநயோகம் இருக்காது.திருச்சி மாநகராட்சி ஆணையர் தகவல்

Ad banner

திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

TVK ad

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் 600 mm CI பிரதான குடிநீர் உந்து குழாயில் (கண்டோன்மென்ட் முத்தரையர் சிலை அருகில்) 5 மீட்டர் அளவில் 400 mm பிரதான குடிநீர் உந்து குழாய் சிறிய அளவில் உள்ளது. எனவே, அதற்கு பதிலாக 600 mm CI குடிநீர் உந்து குழாய் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. இதனை ஒட்டி நாளை 08.07.2026 இப்பணி மேற்கொள்ளப்படவுள்ளதால், மேற்கண்ட நீரேற்று நிலையத்திலிருந்து தில்லை நகர், நகர், கண்டோன்மென்ட புதியது, காஜாபேட்டை பழையது, காஜாபேட்டை புதியது, அண்ணா கண்டோன்மென்ட பழையது, ஜங்ஷன் பழையது, ஜங்ஷன் பொன்நகர், கருமண்டபம், தெற்கு ராமலிங்க நகர்,உய்யக்கொண்டார் திருமலை பழையது, UKT புதியது, கல்லாங்காடு, மிளகுபாறை மற்றும் சொசைட்டி காலணி ஆகிய 15 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநயோகம் நாளை மறுநாள் வியாழக்கிழமை 09.07.2026 அன்று ஒருநாள் மட்டும் இருக்காது.

10.07.2026 அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.