முதல்வர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் முப்பெரும் விழாவில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்,ஜவகர் பங்கேற்பு.
தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளரும்,ஊரக வளர்ச்சி துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் ஆலோசனையின்படி திருச்சி சந்துக்கடையில் இன்று மாலை 6:00 மணிக்கு நடைபெறும் தமிழக வெற்றிக்கழக கொடியேற்றி அன்னதானம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் முப்பெரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் தலைமை தாங்குகிறார்.பொறுப்பாளர் தர்கா சௌகத்,மற்றும் வெல்லமண்டி ஜவர்லால் நேரு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.முன்னதாக பகுதி செயலாளர் கௌதமன் வரவேற்புரை ஆற்றுகிறார்.
இந்நிகழ்வுகளில் அனைவரும் திரளாக பங்கேற்று சிறப்பிக்குமாறு முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

