Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி முன்னாள் மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமையில் அமைச்சர் மற்றும் வாரியத் தலைவரை சந்தித்த தவெகவினர் .

0

'- Advertisement -

திருச்சி முன்னாள் மாமன்ற உறுப்பினரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளருமான செந்தில்நாதன் சில நாட்களுக்கு முன் தவெக பொதுச் செயலாளர், அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.

Ad banner

செந்தில்நாதனுடன் திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் படம் பொறுப்புகளில் பணியாற்றி வந்த நிர்வாகிகளும் தங்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று இயற்கை வளங்கள் துறை அமைச்சர் TK.பிரபு அவர்களை,

முன்னாள் மாமன்ற உறுப்பினர் ப.செந்தில்நாதன் தலைமையில்,

நாகநாதர் சிவக்குமார், உமாபதி, மதியழகன், சீனி ஆனந்த், கல்லணை குணா, பூர்ண சந்திரன், அசோக் குமார், அஸ்வின் குமார், கைலாஷ் ராகவேந்திரா, கருணாநிதி ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

இதே போன்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மாண்புமிகு கு.ப. கிருஷ்ணன் அவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.