Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பாலக்கரை காவல் நிலையம் சுற்றி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களால் பொதுமக்கள் பெரும் அவதி

0

'- Advertisement -

திருச்சி பாலக்கரை காவல் நிலையம் செல்லும் வழியெங்கும் இருசக்கர மூன்று சக்கரை நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வேர்ஹவுஸ் முதல் பாலக்கரை காவல் நிலையம் வரை உள்ள பள்ளிக்கூடம், செங்குளம் காலனி, எடத்தெரு செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

 

Ad banner

காவல்துறை வாயிலில்,சைடில் நோ பார்க்கிங் என போர்டு வைத்தும் 24 மணி நேரமும் குறிப்பிட்ட வாகனங்கள் தொடர்ந்து அங்கு நிறுத்த வைக்கப்பட்டுள்ளது, இதனால் காவல் நிலையம் வரும் புகார் தாரர்கள் , வழக்கறிஞர்கள் மற்றும் விசாரணைக்கு வருபவர்கள் தங்கள் வாகனத்தை நிறுத்த முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

 

இதுகுறித்து யாராவது கேள்வி கேட்டால் அவர்களை தகாத வார்த்தையில் திட்டியும் வருவதாக கூறப்படுகிறது.

பாலக்கரை காவல் நிலையத்திற்கு எதிரில் உள்ள ஜெராக்ஸ் கடை,வழக்கறிஞர் அலுவலகம்,கேட்டரிங் டீக்கடை போன்ற இடங்களுக்கு வருபவர்கள் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதாக கூறப்படுகிறது.

 

இதுகுறித்து காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் ஒரு சில முறை அங்கிருந்த வாகனங்கள் அகற்றப்பட்டது ,ஆனால் மீண்டும் அந்த வாகனங்கள் அங்கே நிறுத்தப்படுகிறது என பொதுமக்கள் கூறுகின்றனர்,

TVK ad

காவல் நிலைய எதிரில் உள்ள பழைய பொருட்கள் வாங்கும் கடை உள்ளது அங்கு எப்போதும் பழைய ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது . தானியம் அருகில் பழைய பொருட்கள் வாங்கும் கடை அருகில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்க வாகனங்கள், ஆட்டோக்கள் போன்றவற்றுக்கு முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாத திருட்டு வண்டிகளாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது .

 

வாகனங்களை திருடி வந்து இங்கே விற்பனை செய்கிறார்களா அல்லது போதை மாத்திரை, கஞ்சா போன்ற குற்ற சம்பவங்களுக்கு இந்த வாகனங்கள் உபயோகப்படுத்தப்படுகிறதா எனவும் இப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

உளவுத்துறை அதிகாரிகள் காவல் ஆய்வாளரிடம்  முறையாக எடுத்துக் கூறியும் நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது.

 

பாலக்கரை காவல் நிலையத்திற்கு ஆணையர் அல்லது துணை ஆணையர் யாராவது திடீர் என சோதனைக்கு வந்தால் வாகனத்தை பாலக்கரை மெயின் ரோட்டில் நிறுத்திவிட்டு காவல் நிலையம் வரை நடந்து தான் செல்ல வேண்டும்,அந்த அளவு இரு பக்கமும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.