திருச்சி : கல்லக்குடி அருகே
போதையில் மாடி படிக்கட்டு கைப்பிடி சுவரில் உட்கார்ந்த இன்ஜினியர் தவறி விழுந்து பலி.
தூத்துக்குடி மாவட்டம் விட்டாலபுரம் பெருமாள் சன்னதி தெரு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 47) என்ஜினியர்.
இவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 39). திருமணத்திற்கு பின் சிறிது காலம் கணவன் மனைவி இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர். பின்னர் சங்கரின் மது பழக்கத்தால் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவு ஏற்பட்டுள்ளது இதை யடுத்து சுப்புலட்சுமி கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சங்கர் திருச்சி கல்லக்குடி அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கட்டிட பிரிவில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். கல்லக்குடி சமத்துவபுரம் லட்சுமி நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அங்கிருந்து வேலைக்கு சென்று வந்து உள்ளார். வழக்கம்போல் பணி முடிந்து இரவு அளவுக்கு அதிகமான மது போதையில் வீடு திரும்பி உள்ளார். பின்னர் போதையில் வீட்டின் மாடி படிக்கட்டு கைப்பிடி சுவரில் ஏறி அமர்ந்து உள்ளார். பின்னர் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி சுப்புலட்சுமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த அவர் கள்ளக்குடிக்கு ஓடோடி வந்தார் பின்னர் இது பற்றி கள்ளக்குடி காவல் நிலைய போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை கைப்பற்றி தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

