Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அதிகாலை கவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.2.5 லட்சம் கஞ்சா மூட்டை பறிமுதல் .

0

'- Advertisement -

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அதிகாலை

Ad banner

கவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.2.5 லட்சம்  மதிப்புள்ள கஞ்சா மூட்டைகள் பறிமுதல் .

ரயில்வே பாதுகாப்பு  படையினரை கண்டதும் கடத்தல்காரர்கள் தப்பி ஓட்டம்

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு இன்று அதிகாலை 2.40 மணியளவில் வந்த ஹவுரா – திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயிலில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் அஜய் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

பின்னர் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செல்வராஜா, சப்-இன்ஸ்பெக்டர்

ஜேம்ஸ், ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் பழனியாண்டி, போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு விஸ்வநாதன், ரெயில்வே பாதுகாப்பு படை பாதுகாப்பு பிரிவு ஏட்டு ஜெயவேல், குற்றப்புலனாய்வு பிரிவு தலைமை காவலர் முத்து குமார், குற்றப்புலனாய்வு பிரிவு காவலர் கார்த்திக், வெடிகுண்டு தடுப்பு பிரிவு தலைமை காவலர் முருகேசன், தலைமை காவலர் பொன்தர்மராஜன், போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு முதல்நிலை காவலர் அப்துல் ஹமீது, காவலர் முனீஸ்வரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் அதிரடியாக ரயில் நிலையத்தில் மற்றும் ரயிலில்

சோதனை நடத்தினர். சோதனையில்

பிளாட்பார்ம் நம்பர் 8-ல் வந்து நின்ற ரெயிலின் பின்பக்க பொது பெட்டி கழிவறை அருகில் ஒரு கருப்பு நிற தோல் பை கேட்பாரற்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த பையை திறந்து சோதனை செய்தபோது அதில் 2 மூட்டைகளில் காய்ந்த கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் 5 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். கடத்தல்காரர்கள் ரெயில்வே பாதுகாப்பு படையினரை கண்டதும் கஞ்சா பையை ரெயிலிலேயே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்இல்லடா கூறப்படுகிறது.

பின்னர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைப்பற்றப்பட்ட கஞ்சா பையை திருச்சி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதனிடம் ஒப்படைத்தனர்.

தப்பி ஓடிய கடத்தல்காரர்களை ரெயில்வே போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருச்சி ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.