Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பசுமடம் காஜாபேட்டை பகுதியில் அதிகமாக கஞ்சா பழக்கம். கஞ்சா போதையில் குடியிருப்பு வாசிகளிடம் தகராறு. திருச்சி கலெக்டரிடம் மனு,

0

'- Advertisement -

பாலக்கரை பசுமடம் காஜாபேட்டை பகுதியில் அதிகமாக கஞ்சா பழக்கம் இருப்பதால் வாலிபர்கள் கஞ்சா போதையில் குடியிருப்பு வாசிகளிடம் தகராறு செய்வதாக குடியிருப்பாசிகள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு,

Ad banner

காஜா பேட்டை பசுமடம் பகுதியில் சுமார் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குடியிருந்து வருகிறது. எங்கள் பகுதியில் அதிகப்படியான கஞ்சா புழக்கம் உள்ளது வாலிபர்கள் கஞ்சா போதையில் இரவு நேரங்களில் அநாகரிமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் போக்குவரத்திற்கு பெரும் இடையூறு ஏற்படுத்துகின்றனர். அதேபோல சிறுவர் சிறுமியர்களிடம் சமூகத்தின் பயன்பாடு இல்லாத செயல்களையும் பேச்சுக்களையும் பரப்புகின்றனர். இதனால் எங்கள் பகுதி மக்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர். அதேபோல பல வீடுகளில் பொருட்களை அடித்து உடைத்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளது எனவே எங்கள் பகுதியில் கஞ்சா பழக்கத்தை கட்டுப்படுத்தவும் குடியிருப்பு வாசிகளிடம் தகராறு செய்யும் வாலிபர்களை கண்டித்து கடும் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட கலெக்டர் போலீசாரிடம் அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தி புகார் மனு அளித்து உள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.