தமிழக வெற்றி கழக தொண்டர்கள் ஆய்வில் ஈடுபடலாம்,இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவால் அதிர்ச்சி.
தமிழக வெற்றி கழக தொண்டர்கள் ஆய்வில் ஈடுபடலாம்,இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவால் அதிர்ச்சி.

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் -அகிலாண்டேஸ்வரி கோயிலில் உள்ள பிரசாதக் கடைகளில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று ஆய்வு செய்தார்.அங்கு உள்ள பிரசாதங்கள் அடங்கிய கவர்களில் தயாரிப்புத் தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் இருந்துள்ளன.இது குறித்து அவர் கடை உரிமையாளர்களிடம் கேட்டறிந்தார்.தொடர்ந்து, தன்னுடைய உதவியாளரிடம், “நம்முடைய கட்சியினரை அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கோயில்களுக்குச் சென்று, அமைச்சர் சொன்னார் எனக் கூறி அவர்களிடம் பேசி, பிரசாதக் கடைகளில் ஆய்வு செய்யச் சொல்லுங்கள்” என அறிவுறுத்தினார்.
இதனை கேட்ட அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கட்சியினர் ஆய்வு செய்ய அமைச்சர் கூறுவது எப்படி? ,உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எதற்காக உள்ளனர்.அமைச்சர் என்றால் எப்படி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் உத்தரவு இடலாமா ? கட்சி தொண்டர்கள் ஆய்வுக்கு சென்றால் அங்கு சட்ட ஒழுங்கு பிரச்சனை வராதா? இதுகூட அமைச்சராக உள்ளவருக்கு தெரியாதா என பொதுமக்கள் புலம்பி வருகின்றனர் ….

