Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி காந்தி மார்க்கெட்டில் காரை நிறுத்தி இதில் தகராறு சேதப்படுத்தியவர் கைது .

0

'- Advertisement -

திருச்சி காந்தி மார்க்கெட்டில் காரை நிறுத்தி இதில் தகராறு சேதப்படுத்தியவர் கைது .

Ad banner

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மாலை மாரியம்மன் நகரை சேர்ந்தவர் சக்தி வெங்கடேஷ் ( வயது 32) இவர் சம்பவத்தன்று காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டிற்கு தனது எலக்ட்ரிக் காரில் வந்துள்ளார் பின்னர் அவர் அப்பகுதியில் தனது காரை நிறுத்தி விட்டு மீன் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த திருச்சி அரியமங்கலம் ஜோதி நகர் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 28) என்பவர் காரை அந்த பகுதியில் விட்ட சக்தி வெங்கடேசனிடம் இது குறித்து கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரவிச்சந்திரன் சக்தி வெங்கடேஷை தகாத வார்த்தைகள் திட்டி தாக்கி காரை சேதப்படுத்தி உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ரவிச்சந்திரணை கைது செய்து உள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.