Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த இனிகோ மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் மகேஸ் பொய்யாமொழி.

0

'- Advertisement -

திருச்சி கிழக்கு வாக்காளர்களுக்கு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த இனிகோ இருதயராஜ் மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

Ad banner

திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு தொகுதிக்குட்பட்ட கலைஞர் நகர் பகுதி கருணாநிதி நகர், வயர்லெஸ் ரோடு மற்றும் எல்.ஐ.சி காலனி ஆகிய பகுதிகளில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் . இனிகோ இருதயராஜ் அவர்கள் வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

இந்த நெகிழ்ச்சியான நிகழ்வைத் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் முன்னின்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி வைத்தார்.

முக்கிய வீதிகளின் வழியாக சென்று வாக்காளர்களைச் சந்தித்த வேட்பாளர், தனக்கு ஆதரவளித்த பொதுமக்களுக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் திமுகத் தொண்டர்கள் வேட்பாளருக்கும், மாவட்டச் செயலாளருக்கும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தோழமைக் கட்சி நிர்வாகிகளும், கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும் இந்த நன்றி அறிவிப்பு நிகழ்வில் பெருமளவில் கலந்து கொண்டனர்.

தேர்தல் களத்தில் தங்களுக்குக் வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தார் இனிக்கோ. .

இந்நிகழ்வில் மாநகரச் செயலாளர்

மு மதிவாணன் பகுதி செயலாளர் மணிவேல் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.