Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்க கொடியை அறிமுகம் செய்த மாநில செயலாளர் ஜெபி .மக்களுக்காக என்றும் போராடும் இயக்கம்.

0

'- Advertisement -

நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்க கொடியை அறிமுகம் செய்த மாநில செயலாளர் ஜெபி

Ad banner

நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜெபி என்கிற ஜெயராம் பாண்டியன் நேற்று வெள்ளிக்கிழமை மாலை தனது பிறந்தநாளை முன்னிட்டு, நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கொடி அறிமுக விழா, திருச்சி உறையூர் பகுதியில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் ஜெயராம் பாண்டியன் கலந்து கொண்டு இயக்கத்தின் கொடியினை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார்.

மேலும் இந்த நிகழ்வில் மாநில செயலாளர் மணிகண்டபிரபு, மாநில மகளிர் அணி செயலாளர் பரமேஸ்வரி, மாவட்ட மகளிர் அணி தலைவி ரம்யா மணிகண்டன், மாநில மகளிர் அணி செயலாளர் சங்கீதா, திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் பாலா, ஒன்றிய இளைஞரணி செயலாளர் முகேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் சந்துரு மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.

கோடியே அறிமுகப்படுத்திய பின் தொண்டர்களிடம் மாநில பொதுச் செயலாளர் ஜெபி பேசுகையில் ……

நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டதற்கான காரணத்தையும், மக்களுக்கு தேவையான அரசு நலத்திட்ட உதவிகளை நேரடியாக கொண்டு செல்வோம் என்பதை விரிவாக எடுத்துரைத்தார்.

இந்த இயக்கக் கொடியில் மூன்று வர்ணங்கள் இடம் பெற்றுள்ளது. இதில் மஞ்சள் நிறம் மங்களகரத்தையும், இயக்க நிர்வாகிகள், தொண்டர்களின் வெள்ளை மனதை குறிக்கும் வகையில் வெண்மை நிறத்தையும், மக்களுக்காக ரத்தத்தை கொடுத்து உழைக்கும் நிர்வாகிகள் தொண்டர்களின் உழைப்பை குறிக்கும் விதமாக சிவப்பு நிறமும் இடம் பெற்றுள்ளது.

இந்த இயக்கம் மிக விரைவில் விஸ்வரூபம் எடுக்கும். விரைவில் மாநிலத் தலைவர் கலந்து கொள்ளும் வகையில் திருச்சி மாவட்டத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெறும். மேலும் தமிழக அளவில் ஒரு இயக்கமாக இல்லாமல், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விதமான மக்களுக்குமான இயக்கமாக இந்த இயக்கம் செயல்படும். நேதாஜி சுதந்திர போராட்டத்தின் போது இளைஞர்களை அழைத்து எவ்வாறு போராடினாரோ, அது போல மாநில தலைவர் மற்றும் மாநில பொதுச் செயலாளரான எனது தலைமையில் இந்த இயக்கம் எப்போதும் செயல்படும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவருக்கும் இரவு அசைவ உணவும் வழங்கப் பட்டது

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.