திருச்சியில் பெண்ணுக்கு சமூக வலைதளத்தில் ஆபாச பதிவு அனுப்பிய கறிக்கடை ஊழியருக்கு அடி உதை.4 பேர் கைது
திருச்சியில் பெண்ணுக்கு சமூக வலைதளத்தில் ஆபாச பதிவு அனுப்பிய கறிக்கடை ஊழியருக்கு அடி உதை.4 பேர் கைது

திருச்சி காந்தி மார்க்கெட் பூக்கொல்லை தெருவை சேர்ந்தவர் இப்ராஹிம் ஷா (வயது 29). இவர் தஞ்சாவூர் சாலையில் உள்ள இறைச்சி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் அந்த கடையில் வேலை பார்க்கும் பெண்ணிற்கு சமூக வலைத்தளத்தில் ஆபாச மெசேஜ் அனுப்பி உள்ளார். இது குறித்து அப்பெண் தனது கணவரிடம் கூறியுள்ளார். இதன் காரணமாக அந்த பெண்ணின் கணவர் மற்றும் 3 பேர், அவர் வேலை செய்யும் கடைக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் இப்ராஹிம் ஷாவை தகாத வார்த்தைகளால் திட்டி கையால் தாக்கி உள்ளனர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காந்தி மார்க்கெட் பூக்கொல்லை தெருவை சேர்ந்த அந்த பெண்ணின் கணவர் எழில் ராஜன் (வயது 35,) தாராநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 30, ) வீரபாண்டியன் ( வயது 26, ) அரியமங்கலத்தை சேர்ந்த மணிவண்ணன் (வயது 38 )ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
ஆபாச பதிவு அனுப்பிய இப்ராஹிம் ஷா மீது என்ன வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் தெரியவில்லை …..

