திருச்சி முசிறி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் மீது மோசடி புகார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவில் முசிறி தொகுதி மக்கள் தங்களது சட்டமன்ற பிரதிநிதியாக இன்ஜினியர் விக்னேஷ் என்பவரை தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு அனுப்பியுள்ளனர். மேற்படி நபர் அவருடைய மனைவியுடன் இணைந்து நடத்தும் CM பில்டர்ஸ் மூலம் இலட்ச கணக்கில் பணத்தை பெற்று கொண்டு மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து திருச்சி கே.கே. நகர், ரங்கநகர் பகுதியில் வசித்து வருபவர் கற்பகநாதன் இவரது மனைவி பெயர் லட்சுமி (வயது 41) திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் கேகே நகர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-
இதே பகுதியில் தான் நடத்தி வரும் நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்காக கட்டிட உரிமையாளர்களிடம் அனுமதி பெற்று லால்குடியில் சிஎம் பில்டர்ஸ் என்ற பெயரில் தொழில் செய்து வரும் முசிறி தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் இன்ஜினியர் விக்னேஸ்வரன் மற்றும் அவரது மனைவி சிவரஞ்சனி மூன்று மாதங்களில் பணிகளை முடித்து தருகிறேன் எனக்கூறி
20.3..2025 முதல் பல்வேறு தவணைகளாக ரூபாய்.17.30 லட்சத்தை பெற்றுக் கொண்டனர் .மேலும் வங்கிகளில் இருந்து பெற்ற தொகையுடன் மொத்தம் ரூ.80, 90,000 /- யை பெற்ற தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் மற்றும் அவரது மனைவி சிவரஞ்சனியும் இதுவரை எந்த பணியும் தொடங்கவில்லை.
பணி ஏன் தொடங்கவில்லை என்றபோது பிரச்சாரத்திற்கு சென்று விட்டார் என அவரது மனைவி கூறினார். சரி
பணத்தை திருப்பி தாருங்கள் நான் கேட்டபோது அதனை தராமல் கூட்டி சதி செய்து ஏமாற்றி வருகிறார்கள்.
மேலும் எங்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி வரும் சிஎம் பில்டர்ஸ் உரிமையாளரும் தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏவுமான இன்ஜினியர் விக்னேஸ்வரன் மற்றும் அவரது மனைவி சிவரஞ்சனி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
(மேற்படி தொகைக்கான GST வரியையும் கட்டாமல் ஏமாற்றியதாக தமிழக வெற்றிக் கழக தலைவரிடமும் புகார் கொடுத்துள்ளனர்.)

