Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி என்ஐடி சிவில் இன்ஜினியரிங் துறை மூத்த பேராசிரியர் பணி ஓய்வு பாராட்டு விழா

0

'- Advertisement -

ஜி.சுவாமிநாதன் பணி ஓய்வு பாராட்டு விழா

Ad banner

திருச்சி என்ஐடி சிவில் என்ஜினியரிங் துறை மூத்த பேராசிரியர் ஜி.சுவாமிநாதன் பணி ஓய்வு பெற்றதையடுத்து, பாராட்டு விழா நேற்று நடந்தது.

நிகழ்வில், திருச்சி என்ஐடி பேராசிரியர்கள் சார்பில் நடந்த பாராட்டு விழாவில், மூத்த பேராசிரியர்கள், புண்ணியமூர்த்தி, அருள் டேனியல், பேராசிரியர்கள் சிவக்குமாரன், பேராசிரியர் ஷீபா, தொழிலதிபர் ஸ்ரீராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாராட்டி பேசினர். முடிவில், பேராசிரியர் சுவாமிநாதன் ஏற்புரை வழங்கினார்.

பேராசிரியர் சுவாமிநாதன் 1988ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி ஆர்இசியில் விரிவுரையாளராக பணியில் சேர்ந்தார். 1999ம் ஆண்டு உதவி பேராசிரியர், 2007ம் ஆண்டு பேராசிரியர், 2019ம் ஆண்டு மூத்த பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். 2011ம் ஆண்டு புதுச்சேரி என்ஐடி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார். 2012 முதல் 2015ம் ஆண்டு வரை பொறுப்பு பதிவாளராக பணியாற்றி உள்ளார்.

சிவில் என்ஜினியரிங் துறை தலைவராக 2019 முதல் 2022 வரை பணியாற்றி உள்ளார். சிவில் இன்ஜினியரிங் துறையில் புதிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வகத்தை அமைத்து, அதன் வழிகாட்டுதல் பணியையும் மேற்கொண்டார். கல்வி சார்ந்த பங்களிப்பில் 8 முனைவர் பட்ட ஆய்வேடுகள், 2 முதுகலை பட்ட ஆய்வேடுகள், 50 முதுகலை, 40 இளங்கலை ஆய்வு வெளியீடுகள், 7 ஆய்வுத்திட்டங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பில், தொழில்முறை உறுப்பினராக இருந்து நேற்று ஓய்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.