Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காவல்துறையினர் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது டிஜிபி அதிரடி உத்தரவு. போலீசார் அதிர்ச்சி.

0

'- Advertisement -

மேற்கு வங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில், இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வருகின்ற மே 4-ம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.

Ad banner

வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை அன்று அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மே 2-ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை, காவலர்கள் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது என டிஜிபி அதிரடிவு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் பதவியேற்றார். இதற்கு முன்பு தமிழ்நாடு காவல் அகாடமியின் டிஜிபியாகவும் இவர் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வருகின்ற மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பபட உள்ள நிலையில், காவலர்கள் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது என டிஜிபி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். வாக்கு எண்ணிக்கையின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கவே, டிஜிபி இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:, தமிழ்நாட்டில் வருகின்ற மே 4-ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்நிலையில் வருகின்ற மே 2-ம் தேதி முதல் காவல் துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை யாரும் மறு உத்தரவு வரும் வரை விடுப்பு எடுக்கக் கூடாது.

இப்போது விடுப்பில் உள்ள காவலர்கள் அனைவரும் மே 2-ம் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும். மகப்பேறு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, மருத்துவ விடுப்பு மற்றும் கல்வி விடுப்பில் உள்ளவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது” என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்..

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.