ஒரு மணி நேரத்துக்கு மேலாக மக்களோடு மக்களாக நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்களித்த திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி .
ஒரு மணி நேரத்துக்கு மேலாக மக்களோடு மக்களாக நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்களித்த திருவெறும்பு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் முனைவர் மகேஷ் பொய்யாமொழி .

200 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக வரலாறு படைக்கும்அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதி.
“மக்கள் தீர்ப்பு மகேச
ன் தீர்ப்பு என்பார்கள்; எனது தாய் வீடான திருவெறும்பூர் தொகுதி மக்களின் தீர்ப்பு, அவர்களின் வீட்டுப் பிள்ளையான இந்த மகேஷுக்கே சாதகமாக அமையும்,” என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ்
பொய்யாமொழி நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது:-
மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிய மனநிறைவு
கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பள்ளிகளுக்கு ஆய்விற்காகச் சென்ற தான், இன்று ஒரு வாக்காளராகப் பள்ளியில் வரிசையில் நின்று கொண்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார். கடந்த 15 நாட்களாகத் திருவெறும்பூர் தொகுதியில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரம் குறித்து அவர் பேசுகையில்:-
2016-2021 காலகட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தபோது, மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து என்னை வழிமறித்தனர். ஆனால், 2021-2026 காலகட்டத்தில் ஆளும் கட்சி உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்து அவர்களின் எண்ணற்ற கோரிக்கைகளை நிறைவேற்றிய மனநிறைவுடன் தற்போது மக்களைச் சந்தித்துள்ளேன்.
மனுக்களின் எண்ணிக்கை:
பிரச்சாரத்தின் போது வெறும் 32 மனுக்கள் மட்டுமே மக்களிடமிருந்து வந்தன. அந்த மனுக்களிலும் “நாங்கள் கேட்ட கோரிக்கைகளை நிறைவேற்றியதற்கு நன்றி” என்ற வாசகங்களே முதன்மையாக இருந்தன. மீதமுள்ள சில கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருமாறு மக்கள் அன்புடன் கேட்டுக்கொண்டனர்.
மகளிர் ஆதரவும் ‘வெல்வோம் 200’ இலக்கும்
தமிழக முதல்வரின் ஓய்வறியா உழைப்பிற்குத் தமிழகப் பெண்களும், தாய்மார்களும் பெரும் ஆதரவு அளித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
“பெண்களின் ஆதரவு எந்த இயக்கத்திற்கு இருக்கிறதோ, அந்த இயக்கத்தின் வெற்றி உறுதி. தமிழக முதல்வர் கூறியது போல, வரவிருக்கும் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக புதிய வரலாறு படைக்கும் என்பது நிச்சயம்,” என்று அவர் உறுதியளித்தார்.
திருச்சி கிழக்குத் தொகுதி வேட்பாளர் இனிக்கோ இருதயராஜ் குறித்துப் பேசிய அமைச்சர், அவர் ஒரு ஓய்வறியாத உழைப்பாளி என்றும், உழைப்பவர்களைத் தமிழக மக்கள் என்றும் கைவிட்டதில்லை என்றும் குறிப்பிட்டார். முதல்வரின் மக்கள் நலத் திட்டங்களால், திருச்சி கிழக்குத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

