Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் தவறவிட்ட தங்க நகைகள் உரியவரிடம் ஒப்படைத்த திருச்சி ரெயில்வே போலீசார்.

0

'- Advertisement -

ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் தவறவிட்ட தங்க நகைகள் உரியவரிடம் ஒப்படைத்த திருச்சி ரெயில்வே போலீசார்.

 

Ad banner

திருச்சி ரெயில் நிலையத்திற்கு இன்று காலை ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.அப்பொழுது பயணிகள் அனைவரும் ரெயில் பெட்டியில் இருந்து இறங்கி சென்று விட்டார் கர்.

இதையடுத்து ரெயில்வே போலீசார் ரயில் பெட்டிகளை சோதனை மேற்கொண்டனர்.

அப்பொழுது போலீஸ் ஏட்டு ராஜலிங்கம், போலீஸ் சந்தானம் ஆகியோர் ரெயில் பெட்டியில் பயணிகளின் இருக்கைகளை சோதனை செய்த போது அங்கு ஒரு பேக் இருந்தது அந்த பேக்கில்

தங்க நகைகள் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அதனை கைப்பற்றி சோதனை செய்த போது அதில் ஒரு அடையாள அட்டை இருந்தது. அதனை வைத்து போலீசார் விசாரணை செய்தபோது திருச்சி அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்த  ஸ்ரீமத் என்பவரின் மகன் தேவராஜ் (வயது 62) என்பவரது என்று தெரிய வந்தது. மேலும் இவர் சென்னையில் இருந்து திருச்சி வந்த போது தனது பேக்கை தவறவிட்டார் என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ரெயில்வே போலீசார் நகைகளை தவற விட்ட தேவராஜ்க்கு தகவல் தெரிவித்து அவரை வரவழைத்து தங்க நகைகளை அவரிடம் ஒப்படைத்தனர்.

நகைகளை பெற்றுக் கொண்ட தேவராஜ் ரயில்வே போலீசாருக்கு நன்றிகளை தெரிவித்து சென்றார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.