திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் கிழக்கு தொகுதிகள் போட்டியிடும்தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை சசிகலா பிரச்சாரம் செய்கிறார்.அனைவரும் திரளாக பங்கேற்க மாவட்ட பொறுப்பாளர்கள் அழைப்பு
சசிகலா தற்போது அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (AIPTMMK) என்ற புதிய கட்சியைத் தொடங்கி வழிநடத்தி வருகிறார். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்த கட்சியை அறிவித்த அவர், ‘தென்னந்தோப்பு’ சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்து இருந்தார்.ராமதாஸ் அணியுடன் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறார்.

இந்த நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில்
போட்டியிடும் வேட்பாளர்
A.விஜய் அவர்களை ஆதரித்து இன்று வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் ஸ்ரீரங்கத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.இதனை தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில்
போட்டியிடும் வேட்பாளர்
நந்தக்குமார் அவர்களை ஆதரித்து கே.கே. நகரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த நிகழ்வுகளில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக பங்கேற்குமாறு திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னாள் காவல்துறை அதிகாரி கோவிந்தராஜ், ,மெஜஸ்டிக் ஆலாம் பகுருதீன் ,
ஒத்தக்கடை செந்தில் ஆகியோர் வெளியீட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

