அம்மா பேரவை மாநில துணைச் செயலாளராக வெல்லமண்டி ஜவஹர்லால் நேருவை நியமனம் செய்த எடப்பாடி பழனிச்சாமி.குவிந்து வரும் பாராட்டு.


அதிமுக ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளராக வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு நியமனம். அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.
திருச்சியை சேர்ந்தவர் வெல்லமண்டி நடராஜன். இவர் முன்னாள் முதல மைச்சர் மறைந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்தார். இவரது மகன் ஜவஹர்லால் நேரு. இவரும் அதிமுகவில் பயணித்து வருகிறார். கட்சிப் பணிகள் மற்றும் தலைமை அறிவிக்கும் போராட்டங்கள் தற்போது திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் ஆதரித்து தீவிர பிரச்சாரம் என அனைத்திலும் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் அ.இ.அ.தி.மு.கழக மாநில புரட்சித்தலைவி அம்மா பேரவை துணை செயலாளராக ஜவஹர்லால் நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜவஹர்லால் நேருவுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை மற்றும் சால்வை அணிவித்தும், பூச்செண்டு கொடுத்தும் அவரது பணி மேலும் மேலும் சிறக்க கோரி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன்,திருச்சி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கார்த்திகேயன்,திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் ஆகியோருடன் சென்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார் .

