Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கடவுள் இல்லை என்ற பெரியாரின் படத்திற்கு முன் குத்துவிளக்கு ஏற்றி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் கே என் நேரு.

0

'- Advertisement -

திராவிட முன்னேற்றக் கழகத்தின் (DMK) முக்கிய கொள்கைகள் சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை, பகுத்தறிவு மற்றும் மாநில சுயாட்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. அண்ணா மற்றும் பெரியாரின் வழியில் சமூகநீதி, இந்தித் திணிப்பு எதிர்ப்பு, மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி, மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றை முக்கிய கொள்கைகளாகக் கொண்டு இயங்குகிறது திமுக .

 

Ad banner

திமுக தலைவர் மு க ஸ்டாலின் கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் ,இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான், பக்ரீத் வாழ்த்துக்கள் தெரிவிப்பார்.ஆனால் இந்துக்கள் கொண்டாடுகின்ற ஆயுத பூஜை, விநாயகர் சதுர்த்தி போன்ற திருவிழாவுக்கு முதல்வர் வாழ்த்துக்கள் தெரிவிக்க மாட்டார். அதே போன்று அவர்கள் நடத்தும் டிவியில் விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சி என்று தான் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவார்கள் .

 

இந்த நிலையில் திருச்சி மேற்கு தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் கே என் நேரு தான் மனு தாக்கல் செய்த உடன் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் தான் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை செய்தார் .

இது நடைபெற்ற இரண்டு நாட்களில் திருச்சி தில்லை நகரில் உள்ள தனது அலுவலகத்தில் திருச்சி மேற்கு தொகுதி தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் திறந்து வைத்தார் .அப்போது மங்கள ஒளி முழங்க ரிப்பன் வெட்டி அலுவலகத்தில் கடவுள் இல்லை என்ற பெரியார் மற்றும் அண்ணா, கலைஞர், ராமஜெயம் ஆகியோர் படத்துக்கு முன் குத்துவிளக்கு ஏற்றி தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.

சனாதனத்தை ஒழிப்போம் என்ற கொள்கை உடைய திமுகவின் அமைச்சர் கே என் நேரு இந்து முறைப்படி சாமி தரிசனம் செய்து அலுவலகம் திறப்பது எந்த வகையில் நியாயம் என்று திமுகவினரே கேள்வி கேட்டு உள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.