ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடாத திமுக நிர்வாகிகள். நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்?
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளராக களம் இறங்கி உள்ளவர் அமைச்சர் நேருவின் விசுவாசி துரைராஜ்.

நேற்று மனு தாக்கல் செய்த பின் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் அமைச்சரின் நேருவின் தீவிர விசுவாசியான துரைராஜ்க்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் திமுக நிர்வாகிகள் யாரும் ஈடுபடவில்லை என்பதுதான்.
அமைச்சர் நேரு கூறியும் துரைராஜ்க்கு ஆதரவாக திமுக நிர்வாகிகள் யாரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாது ஏன் என்பது தெரியவில்லை.
உளவுத்துறை காவல்துறையினர் இது குறித்து தீர விசாரித்து தமிழக முதல்வருக்கு தகவல் அனுப்புவார்களா?
இந்த தகவல்களை அறிந்த உடன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் துரைராஜ்க்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாத திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .
திமுக தலைவர் மு க ஸ்டாலின் அதிரடி நடவடிக்கையால் தான் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக நிர்வாகிகள் துரைராஜ்க்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள், இல்லையென்றால் ஸ்ரீரங்கம் தொகுதியை வீணாக திமுக இழக்கும் என்பதே அரசியல் விமர்சர்களின் கருத்து.
திமுக வேட்பாளர் துரைராஜ்க்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாத நிர்வாகிகள் விபரம் அடுத்த பதிவில்

