திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் அறிவித்த வாக்குறுதிகளை எடுத்துக் கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட தவெக மலைக்கோட்டை பகுதி இணைச் செயலாளர்
திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழக வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் நிறுவன தலைவர் விஜய் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை திருச்சி கிழக்கு தொகுதி மக்களிடம் எடுத்துக்கூறி வாக்குகள் சேகரித்த அடிப்படை தொண்டர்கள் .

நீங்கள் வாக்கு கேட்க வரவே வேண்டாம் எங்கள் வாக்கு நடிகர் விஜய்க்கு தான் என உறுதி கூறிய பொதுமக்கள்.
இருந்தாலும் அனைத்து தரப்பு பொதுமக்களிடமும் தமிழக வெற்றி கழகத்தின் வாக்குறுதிகளை எடுத்து கூறி வாக்கு சேகரித்த திருச்சி மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் அவர்களின் ஆலோசனின் பேரில் மலைக்கோட்டை மாநகர் பகுதி இணை செயலாளர் ராக்போர்ட் ராஜேஷ் தலைமையில் திருச்சி கிழக்கு மாவட்ட உறுப்பினர் சேர்க்கை அணி பொருளாளர் ச.சபரீஸ் மற்றும் அணி நிர்வாகிகள்
ப. ஹரிஹரன் , ச. சுதீஷ்பாண்டி, ச. யோகேஸ்வரன், நா. அஜிஸ் உள்ளிட்ட பலர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

