திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் அமைச்சராக சிறப்பாக பணியாற்ற உள்ள அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.
திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் மீண்டும் திமுக சார்பில் போட்டியிட உள்ளார் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி .
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பயோ-டேட்டா
பிறப்பு 2 டிசம்பர் 1977
அன்பில் மகேஸ் பொய்யாமொழியின்
கல்வித்தகுதி:
பள்ளிப் படிப்பு:- திருச்சிராப்பள்ளி,
ஈ.ஆர். (E.R.) மேல்நிலைப் பள்ளியில் பயின்றார்.
பட்டப்படிப்பு: திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் (Bishop Heber College) கணினி பயன்பாட்டியலில் முதுநிலைப் பட்டம் (MCA) பெற்றவர்.
ஆராய்ச்சி படிப்பு திருச்சி தேசிய கல்லூரியில் உடற்கல்வித் துறையில் முனைவர் பட்ட (Ph.D.) ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
தொழில்முறை வாழ்க்கை
அரசியலுக்கு வருவதற்கு முன்பு சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்களில் மென்பொருள் உருவாக்குநராக (Software Developer) பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
அரசியல் :
பின்னணி மற்றும் பயணம்.
குடும்பப் பாரம்பரியம்: இவர் ‘அன்பில்’ குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தாத்தா அன்பில் தர்மலிங்கம் முன்னாள் அமைச்சர் மற்றும் கழகம் வளர்த்த தலைவர்களில் முன்னோடி தலைவராக திகழ்ந்தவர்.
தந்தை அன்பில் பொய்யாமொழி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநில இளைஞரணி துணைச் செயலாளராக பதவி வகித்துள்ளார். ஆகிய இருவரும் திமுகவின் மிக முக்கியமான தலைவர்களாக விளங்கியவர்கள்.
அரசியல் வருகை:
2000-ம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
பொறுப்புகள்:
2015-ல் திமுக மாநில இளைஞரணி துணை செயலாளராக பணியாற்றினார். தற்போது திமுகவின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கிறார்.
சட்டமன்ற உறுப்பினர்:
2016 மற்றும் 2021 ஆகிய இரு தேர்தல்களிலும் திருவெறும்பூர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முக்கிய சாதனைகள் & நிலைப்பாடுகள்
பள்ளிக் கல்வித்துறை: 2021 முதல் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று, ‘இல்லம் தேடிக் கல்வி’, ‘வாசிப்பு இயக்கம்’ போன்ற பல்வேறு முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.
மொழிக் கொள்கை: தமிழக அரசின் இருமொழிக் கொள்கையில் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டவர்; மும்மொழிக் கொள்கையைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்.
கல்வி நிதி: மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய கல்வி நிதியைப் பெறுவதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.
மதயானை புத்தக ஆசிரியர்
ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை தோலுரித்தும் காட்டும் விதமாக மதயானை என்னும் புத்தகத்தை எழுதி உள்ளார்.
தற்போது திருவெறும்பூர் தொகுதியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளார்.அடிப்படை தொண்டனின் வீட்டில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வார்.சிலர் தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இல்லத்திற்கு தான் செல்வார்கள் ஆனால் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தனது தொகுதியில் திருமணம்,கும்பாபிஷேகம்,விளையாட்டு விழா என கட்சிப் பாகுபாடு இன்றி பத்திரிக்கை வைத்தால் தான் அந்த தேதியில் இல்லை என்றாலும் அதன் பின்பு சென்று அவர்களுக்கு வாழ்த்து கூறி வருவது இவரது சிறப்பு பாணி.
மக்களோடு மக்களாக கடந்த பத்து வருடங்களாக திருவெறும்பூர் தொகுதி மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி வரும் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகவும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
தற்போது மூன்றாவது முறையாக திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் அமைச்சராக சிறப்பாக பணியாற்ற உள்ளார்.

