Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆடு திருடிய 2 பேர் கைது.

0

'- Advertisement -

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆடு திருடிய 2 பேர் கைது.

திருச்சி ஸ்ரீரங்கம் ஆர்.எஸ்.சாலையைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 28). இவர் தன் ஆடுகளை தன் வீட்டின் அருகே மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது ஒரு ஆடு மட்டும் மாயமானது குணசேகரனுக்கு தெரிய வந்தது. இது குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் குணசேகரன் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டை திருடிய ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த முருகானந்தம் (வயது 26) மற்றும் கீழவாசலைச் சேர்ந்த முருகன் (வயது 25) ஆகிய இரண்டு வாலிபர்களை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். மேலும் தப்பி ஓடிய  விக்கி என்கிற ராமச்சந்திரன் (வயது 25 ) என்பவரை தேடி வருகின்றனர்.

இவர்களிடமிருந்து திருடப்பட்ட ஆட்டையும் போலீசார் மீட்டு உள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.