Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 100% ஓட்டளிப்பை வலியுறுத்தி மாணவ மாணவிகள் பங்கேற்ற மனித சங்கிலி.

0

'- Advertisement -

திருச்சியில் 100 சதவீத ஓட்டளிப்பை வலியுறுத்தி மாணவ மாணவிகள் பங்கேற்ற

மனித சங்கிலி.

 

பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் பங்கேற்பு.

 

திருச்சி மாநகராட்சி மேற்குத் தொகுதிக்கு உட்பட்ட பாரதிதாசன் சாலை மாநகராட்சி வளாகம் முன்பு 100 சதவீதம் ஓட்டளிப்பை வலியுறுத்தி மனித சங்கிலி நடந்தது.

இந்நிகழ்வை திருச்சி வருவாய் கோட்டாட்சியர் சாலை தவவளன், உதவி ஆணையர் எம். கனகராஜ் ஆகியேர் இன்று தொடங்கி வைத்தார்கள்.

மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடைபெறும் சட்டசபை தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தியும், வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள், பேரணி, கோலங்கள், வாக்காளர் உறுதிமொழி ஆகிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்த வகையில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய, மனித சங்கிலி பேரணி நடந்தது.இதில், மாநகராட்சி அலுவலர்கள் தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், மாநகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் .ஜி.வேல்முருகன் உதவி வருவாய் அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.