திருச்சி கிழக்குத் தொகுதியில் தற்போது வரை துணியால் மூடி இருக்கும் எம்ஜிஆர் சிலை.துணியைக் கூட அகற்ற முடியாத திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன் தலைவா்களின் சிலைகள் மற்றும் உருவப் படங்களை மறைக்கும் பணியில் அரசு ஊழியா்கள் ஈடுபட்டனர்.
திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு சிலைகளை துணியை கொண்டு மூடினர்.
பின்னா், ஒரு சில நாள்களிலேயே தோ்தல் ஆணையத் தரப்பிலிருந்து மறைந்த தலைவா்களது சிலையை மூட வேண்டிய அவசியமில்லை என அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலை, சிந்தாமணி பகுதியில் உள்ள பேரறிஞா் அண்ணா சிலை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை,அம்பேத்கார் சிலை உள்ளிட்ட அனைத்து சிலைகளும் மூடப்பட்டது இரண்டு நாட்கள் முன்னரே துணிகள் அகற்றப்பட்டு சிலைகள் எப்போதும் போல் உள்ளது.
ஆனால் இன்று 23.03.26 திங்கட்கிழமை மாலை வரை திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மெயின் ரோடு சுப்ரமணியபுரம் எஸ் பி அலுவலகம் எதிரில் உள்ள எம்ஜிஆர் சிலை துணிகளால் மூடி வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட ஆர்வம் காட்டி வந்த அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் மறைந்த தலைவர்களின் சிலையை மூட வேண்டாம் என்ற அறிவிப்பு வந்தவுடன் திருச்சி மாநகரில் மூடப்பட்டிருந்த எம்ஜிஆர் சிலைகள் அனைத்தும் துணிகள் அகற்றப்பட்டு விட்டதா என தனது கட்சி நிர்வாகிகளிடம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் இதுதான் ஒரு சிறந்த மாவட்ட செயலாளரின் பணி.
ஆனால் இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் சுப்பிரமணியபுரத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை மூடி சிறை வைக்கப்பட்டது போன்று இது நாள் வரை அப்படியே துணிகளால் மூடியே வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாநகரில் உள்ள உண்மையான அதிமுக தொண்டரிடம் (தனது கையில் எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா உருவ படத்தை பச்சை குத்தி இருந்தவர்) கேட்டபோது இதுவே ஒரு துடிப்பான மாவட்ட செயலாளராக இருந்திருந்தால் இந்நேரம் எம்ஜிஆரின் சிலைக்கு எப்போதோ விடுதலை கிடைத்திருக்கும் ஆனால் தேர்தல் ஆணையம் மறைந்த தலைவர்களின் சிலைகளை மூட வேண்டாம் எனக் கூறியும் எனது தலைவரின் சிலை மூடப்பட்டிருப்பது மிகவும் வேதனையாக உள்ளது என கூறினார்.
தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தும் மூடப்பட்டு இருக்கும் எம் ஜி ஆர் சிலையை மூடி இருக்கும் துணியை அகற்ற முடியாத மாவட்ட செயலாளர் எப்படி ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று …..?

