அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் தமிழக முதல்வர்,எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையை ஏற்று
திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் தலைமையில்
மணப்பாறை தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசன் அவர்களின் ஏற்பாட்டில்
மணப்பாறை தெற்கு ஒன்றிய சேர்ந்த தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த அஜித், மணிவேல்,ஜனாத், முத்துகிருஷ்ணன்,பூபதி,ராஜசேகர் மற்றும் நிர்வாகிகள் 50 க்கும் மேற்பட்டோர் தங்களை தாய் கழகமான அதிமுகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்வில் மருங்காபுரி வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட விவசாய அணி செயலாளர் சின்னச்சாமி மாவட்டத் துணைச் செயலாளர் பொன்னுச்சாமி, மாவட்ட பாசறை செயலாளர் சிகை.சத்துரு, கோவை முருகன், தகவல் தொழில்நுட்பு பிரிவு பால்ராஜ் மற்றும் அதிமுக தொண்டர்கள் உடனிருந்தனர்.

