திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள முக்கிய அதிமுக நிர்வாகிகள் அனைவரும் வெல்லமண்டி நடராஜனால் நியமிக்கப்பட்டவர்கள் அதுவும் பணம் எதுவும் வாங்காமல்.எனவே அதிமுக வெற்றி உறுதி.
வெல்லமாண்டி என். நடராஜன் தமிழ்நாட்டின் 15வது தமிழ்நாடு சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆவார் . 2016 ஆம் ஆண்டில், அவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) வேட்பாளராக திருச்சிராப்பள்ளி (கிழக்கு) தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் .
ஜெயலலிதா 2016 மே மாதம் நடராஜனை சுற்றுலாத்துறை அமைச்சராக நியமித்தார். இது தமிழக அரசில் அவரது முதல் அமைச்சரவைப் பதவியாகும் .
வெல்பமண்டி நடராஜன் மாவட்ட செயலாளராக பதவியில் இருந்த போது மாநகர மாவட்ட அதிமுகவில் நியமிக்கப்பட்ட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் வெல்லமண்டி நடராஜன் பதவிக்கு பத்து பைசா கூட பெறாமல் நியமிக்கப்பட்டவர்கள் .
அந்த நிர்வாகிகள் அனைவரும் வெல்லமண்டி நடராஜனுக்கு மிகவும் விசுவாசிகள். பொது மக்களிடம் நெருங்கி பழகக் கூடியவர்கள் இதனால் திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வெல்லமண்டி நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தால் எளிதாக அதிமுக கிழக்கு தொகுதியில் வெல்லும் என அதிமுகவினாரே (தற்போது கட்சி பதவியை பணம் கொடுத்து வாங்கியவர்கள்) கூறுகின்றனர்.
திருச்சி கிழக்கு தொகுதியில் வெள்ளாளர் சமுதாய மக்களின் ஓட்டு வங்கி அதிகம் உள்ளதால் அனைவரும் அறிந்த வெல்ல மண்டி நடராஜன் இங்கு போட்டியிட வாய்ப்பு அளித்தால் வெற்றி உறுதி.அதை விட்டுவிட்டு வேற யாருக்காவது (இந்திரா கணேசன் கல்வி நிறுவன உரிமையாளர் ராஜசேகர் இவரை கட்சி நிர்வாகிகளுக்கே தெரியாது பின்பு எப்படி மக்களிடம் சென்று வாக்கு கேட்பார்கள் என தெரியவில்லை ) போட்டியிட வாய்ப்பு அளித்தால் வெற்றி சந்தேகமே.

