திருச்சியில் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது.பணம், சீட்டு கட்டுகள் பறிமுதல் .
திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்திரா நகர், தாலிஞ்சி பாலம் அருகே சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அங்கு விரைந்து சென்று, சட்டவிரோதமாக பணம் வைத்த சூதாடிக் கொண்டிருந்த மலைக்கோவில் பகுதியைச் சேர்ந்த ஜாபர் சாதிக் பாட்சா (வயது 49), முருகானந்தம் (வயது 42), ரமேஷ் (வயது 37), செந்தில்குமார் (வயது 42) மற்றும் கருப்பையா (வயது 47) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கட்டு சீட்டு மற்றும் ரூ. 500 ரொக்கப்பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல், முசிறி உட்கோட்டம் காட்டுப்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல வேலி காடு பகுதியில் உள்ள முள் புதர் அருகே பணம் வைத்த சூதாடிய, தொட்டியம் பகுதியைச் சேர்ந்த கண்ணுப்பிள்ளை (வயது 56) மற்றும் நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த சசிகுமார் (வயது 51) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 2 கட்டு சீட்டுகள் மற்றும் ரூ. 350 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

