Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நானும் 50,000 ரூபாய் தருவேன்.திருச்சி விமான நிலையத்தில் சீமான் பேட்டி.

0

'- Advertisement -

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் விமர்சனம் .

திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த 15 நாட்களுக்குள் பல்வேறு கொலைகள் மற்றும் பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளது..6 வயது குழந்தையிலிருந்து 60 வயது முதியவர்களுக்குக் கூட பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது போன்ற தொடர் குற்றச்செயல்கள் அதிகரிப்பு சமூகத்தின் ஒழுக்க சீர்கேட்டிற்கு

காரணமாகிறது. குற்றங்களில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானோர் மதுபோதையில் உள்ளது கவலைக்குரியது. இதைத் தடுப்பதற்கு அரசுக்கு மட்டுமல்ல சமூகத்திற்கும் பொறுப்புள்ளது. மேலும், சாதி அரசியலாக மாறினால் சமத்துவம் அழியும், மதம் அரசியலாக மாறினால் மனிதம் அழியும், பணம் அரசியலாக மாறினால் பண்பாடு மற்றும் ஒழுக்கம் அழியும் .நல்ல ஒழுக்கம் மற்றும் அறநெறி கொண்ட சமூகத்தை உருவாக்க அனைவரும் உறுதி எடுக்க வேண்டும்.

விஜய்க்கு சிபிஐ சம்மன் அளித்தது குறித்து கேட்ட் கேள்விக்கு சீமான் பதில் அளிக்க மறுத்து விட்டார்.

சசிகலா புதிய கட்சி தொடங்கியுள்ளது பற்றி கேட்டதற்கு அவரை வரவேற்றுகிறேன். அரசியலில் மாற்றம் வரவேண்டும் என்ற நோக்கத்தில் தான் அனைவரும் கட்சி தொடங்குகிறார்கள்.அவர் மாற்றத்தை கொண்டு வர வாழ்த்துதுகிறேன்.

திமுக தனியார் மயத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து கேட்டதற்கு நாட்டின் பொருளாதார கொள்கையே தனியார் மயத்தை ஏற்றுக்கொண்டது . கல்வி, மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகள் ஏற்கனவே தனியார் மயமாகிவிட்டன.

கூட்டணி குறித்து கேள்வி கேட்ட போது, இன்னும் எந்த கூட்டணியும் முடிவாகவில்லை என்றும், தங்கள் கட்சி முன்கூட்டியே மக்களிடம் சென்று அரசியல் நிலைப்பாடுகளை விளக்கி வருவதாகவும் தெரிவித்தார். பெரிய பொருளாதார ஆதாரம் இல்லாததால் மக்களை நேரில் சந்தித்து ஆதரவு பெற முயற்சித்து வருவதாகவும் அவர் கூறினார்.

தமிழர் நலனுக்காக நடத்தப்படும் போராட்டங்கள் மக்களிடம் சென்று சேர வேண்டும் , அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஊடகங்களுக்கு இருப்பதாகவும் Nகுறிப்பிட்டார்.

ஈரான் – இஸ்ரேல் போர் போன்ற சர்வதேச மோதல்களில் பல நாடுகள் தலையிட்டு தீர்வு காண வேண்டும். போர் எப்போதும் மனித உயிர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும்.

அதே நேரத்தில், தமிழக அரசியல் போட்டி குறித்து பேசும்போது, நாம் தமிழர் கட்சி முன்வைக்கும் அரசியல் மக்களுக்கு தேவையா? இல்லையா ?என்பதே முக்கியம். மற்றவர்கள் அரசியலுக்கு வருவது எங்கள் கட்சியை பாதிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை வசதி மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய அடிப்படை தேவைகள் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே தங்கள் அரசியல் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

அதிமுக,  திமுக போட்டி போட்டுக் கொண்டு பணம் வழங்குவது குறித்த கேள்விக்கு,நானும் உங்களுக்கு 50,000 ரூபாய் தருவேன் எனக்கூறி அந்த இடத்தையே கலகலப்பாக்கினார் சீமான்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.