Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தந்தை பெரியார் அரசு கல்லூரியில் 15 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா.

0

'- Advertisement -

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (தன்னாட்சி) 15 வது பட்டமளிப்பு விழா இன்று சனிக்கிழமை (14.05.2026)அன்று கல்லூரி திறந்தவெளி கலையரங்கத்தில்  நடைபெற்றது.தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் க.அங்கம்மாள் தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்ச்சியில் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பதிவாளர் ப.ஜெயப்பிரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.திருச்சி தந்தை பெரியார் கல்லூரியின் 16 துறையை சேர்ந்த இளநிலை 1026,முதுநிலை 265,ஆய்வியல் நிறைவேற்றம் (Ph.D.) 2 பேர் என மொத்தம் 1293 மாணவ மாணவிகள் பட்டங்களை பெற்றனர்.16 துறையை சேர்ந்த துறை தலைவர்கள் முன்னிலையில் மாணவர்கள் தங்களது பட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வில் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது குடும்பத்தார் அனைவரும் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.