Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சிறுகனூரில் நடைபெற உள்ள மாநாட்டுத் திடலை பார்வையிட்ட அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.

0

'- Advertisement -

திருச்சி சிறுகனூரில் நடைபெற்று வரும் மாநாட்டு பணிகள் திடலை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி .

Ad banner

09/03/26 அன்று திமுகத் தலைவர்- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுச்சியுரை நிகழ்த்தவுள்ள திமுக 12 வது மாநில மாநாட்டின் பணிகள், கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெற்று வருகிறது.

திமுக இளைஞரணிச் செயலாளர்- தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெற்றி முழக்கமிடும், கழக மாநில மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்க உள்ளார்கள்.

திராவிட மாடல் 2.O ஆட்சிக்கு அடித்தளமிடவுள்ள இம்மாநாட்டுப் பணிகளை இன்றைய தினம் அமைச்சர் முனைவர் மகேஷ் பொய்யாமொழி (சனிக்கிழமை) பார்வையிட்டார்.

இந்நிகழ்வின் போது மாநகரச் செயலாளர் மு.மதிவாணன் மற்றும் பகுதி செயலாளர் ஒன்றிய கழகச் செயலாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.