Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி:தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொதுக்குழுவில் 20 சங்கங்கள் இணைந்து போராட்டம் குறித்து மீண்டும் ஆலோசித்து முடிவு.

0

'- Advertisement -

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம்,ஓய்வூதியம் குறித்து கமிட்டி அமைக்கும் விவகாரம்:

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொதுக்குழுவில் 20 சங்கங்கள் இணைந்து போராட்டம் குறித்து மீண்டும் ஆலோசித்து முடிவு.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று மாநில துணைத்தலைவர் பி.முருகானந்தம் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது.

மாநில பொதுச் செயலாளர் கோதண்டம் முன்னிலை வகித்தார்.செயல் தலைவர் பழனி பாரதி சிறப்புரையாற்றினார்.முடிவில் திருச்சி மாவட்ட பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.

கூட்டத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில்,டாஸ்மாக் நிறுவனத்தில் 23 ஆண்டுகளாக 24 ஆயிரம் டாஸ்மாக் பணியாளர்கள் சமூக பாதுகாப்பு இன்றி குறைந்த தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றோம்.கடந்த மாதம் 20 டாஸ்மாக் சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்.தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தியதன் விளைவாக,எங்களது பிரதான கோரிக்கையான பணி நிரந்தரம்,கால முறை ஊதியம்,ஓய்வூதியம் குறித்து அமைச்சர் மற்றும் உள்துறை செயலாளர் தலைமையில் கமிட்டி அமைத்து 4 மாத காலத்திற்குள் கமிட்டி முடிவுகளை நிறைவேற்றி தருவதாக பேச்சு வார்த்தையில் தெரிவித்தனர்.ஆனால் நேற்று டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கமிட்டி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.இதனால் டாஸ்மாக் பணியாளர்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.

இதுகுறித்து போராட்டக் குழு மீண்டும் கூடி பேசி அடுத்த கட்ட போராட்ட முடிவுகளை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

மேலும் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.தேர்தல் குழு தலைவர் காமராஜ் தலைமையில் நடந்த இந்த தேர்தலில் சங்கத்தின் புதிய மாநில தலைவராக மு.கு. பழனி பாரதி  மாநில பொதுச் செயலாளராக கோதண்டம் மாநில இணை பொதுச் செயலாளராக மரகதலிங்கம் மாநில துணைத்தலைவர்கள் மற்றும் மாநில செயலாளர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.