திருச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.இன்று காலை பந்தக்கால் நடும் விழாவில் அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்பு.
திருச்சியில் வருகிற 11 ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.
இன்று அதிகாலை பந்தகால் நடும் விழா நடைபெற்றது.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கும் நிலையில் தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணியை உறுதி செய்து தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் இறுதி கட்ட நிலையில் உள்ளனர். இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க., பா.ஜ.க . பா.ம.க., – அ.ம.மு.க., தமாகா, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இக்கூட்டணி சார்பில், வருகிற 11 ந் தேதி (புதன்கிழமை) திருச்சியில் பிரம்மாண்டமான பிரசார பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்தனர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இதற்காக இடம் தேர்வு செய்யும் பணி மும்மரமாக நடைபெற்று திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் எதிரே உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டது.
இதனை தமிழக பா.ஜ.க, தலைவர் நயினார் நாகேந்திரன், தனது அறிக்கை வாயிலாக உறுதி செய்து இருந்தார்.
இதற்கிடையில் திருச்சியில் நடைபெறும் பிரச்சார கூட்டத்திற்கு மத்திய மந்திரி எல். முருகன் தலைமையில் குழு அமைத்து பாஜக அறிவித்துள்ளது.
திருச்சி பஞ்சப்பூரில் சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் மேடையில் அமரும் வகையில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்படுகிறது.
இதற்காக இன்று காலை 6 மணி அளவில் பஞ்சப்பூர் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
விழாவில் பா.ஜ.க. சார்பில் மாநில இணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியம், மாநில பொதுச் செயலாளர், கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவர் ஒண்டிமுத்து, மாவட்ட பொதுச் செயலாளர் காளீஸ்வரன், மாவட்ட பொதுச் செயலாளர் அழகேசன், மாவட்ட பொதுச் செயலாளர் லீமா சிவக்குமார், மாவட்ட பொருளாளர் செல்வதுரை, பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் பாலன்,மாநில செயற்குழு உறுப்பினர் இல கண்ணன், அதிமுக சார்பில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் உமாநாத்,அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அவைத்தலைவர் ராமலிங்கம், மாவட்டத் துணைச் செயலாளர், தன்சிங், தருண் உறையூர் பகுதி செயலாளர், கல்நாயக் சதிஷ், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மாவட்ட செயலாளர் குணா, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர், கங்காதரன்,மாவட்ட இணை செயலாளர் , ராஜீவ்காந்தி காந்தி மோகன் மாவட்ட வழக்கறிஞர். மோகன், இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மத்திய மாவட்ட தலைவர் செல்வம், மாநகர் மாவட்ட தலைவர் , மேலப்புதூர் குணா, மாநகர் மாவட்ட செயலாளர், ராபர்ட் கிறிஸ்டி ,மதியழகன் மாவட்ட பொருளாளர் மதியழகன்ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் பால்ராஜ்,நாகேந்திரன், அரசு நேதாஜி,வக்கீல் லெனின் பாண்டியன், ஊடகப்பிரிவு முரளி தினகர்,எம்பி முரளிதரன்,மகளிர் அணி மலர்கொடி,ஊடகப்பிரிவு சிவக்குமார், சீனிவாச ராவ்,மருதராஜ், இளைஞர் அணி சந்தோஷ், வர்த்தக அணி மோகன், இந்திரன், வேங்கூர் கார்த்திக்
மண்டல தலைவர்கள் கார்த்தி,ராஜேஷ் தாய்மணி, சுப்பிரமணி,அனிதா,மற்றும் நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
அண்மையில் பிரதமர் மோடி, இம்மாதம் 1ந்தேதி புதுச்சேரி மற்றும் மதுரையில், மத்திய அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்ததுடன், பிரசார கூட்டங்களிலும் பங்கேற்றார். இந்நிலையில், மீண்டும் வருகிற 11 ந்தேதி தமிழகம் வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
பாரத பிரதமர் மோடி திருச்சி வருகையை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்
உற்சாகமடைந்துள்ளனர்.

