திருச்சி கோட்ட வணிக மேலாளர், சீனியர் டி.சி.எம் பழிவாங்கல் நடவடிக்கையை கண்டித்து டிஆர்இயு கண்டன ஆர்ப்பாட்டம்.
திருச்சி கோட்ட வணிக மேலாளர், சீனியர் டி.சி.எம் பழிவாங்கல் நடவடிக்கையை கண்டித்து டிஆர்இயு கண்டன ஆர்ப்பாட்டம்.
தொழிற்சங்க நிர்வாகியிடம் அநாகரிக முறையில் நடந்து கொண்ட டி .சி .எம் ஐ கண்டித்து டிஆர் இயு சார்பில் கண்டித்து போஸ்டர் ஒட்டிய காரணத்திற்காக, பழிவாங்கும் நோக்கத்தோடு, சீனியர் டி.சி.எம் மற்றும் டி .சி. எம் இருவரும் கூட்டு சேர்ந்து தொழிற்சங்க நிர்வாகி மீது வன்மத்தோடு பொய் குற்றச்சாட்டு சுமத்தியும், போலித்தனமாக செயற்கையாக தரவுகளை உருவாக்கி ரயில்வே விதியை மீறி எஸ். எம். இ (ஸ்பெஷல் மெடிக்கல் எக்ஸாமினேஷன்) (மனநிலை பரி சோதனைக்கு) அனுப்பியதை கண்டித்தும், அதோடு மட்டுமின்றி கடந்த 35 நாட்களாக தொழிலாளியை சொந்த சிக் லீவில் வைத்து ஒட்டுமொத்த குடும்பத்தையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருப்பதையும் திருச்சி கோட்ட இரு கமர்சியல் பிரிவு அதிகாரிகளான சீனியர் டி.சி.எம் மற்றும் டி.சி.எம் கண்டித்தும் டிஆர்இயு சார்பில் . இன்று திங்கட்கிழமை ரயில்வே ஜங்ஷனில் உள்ள தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு டி.ஆர். இ.யு திருச்சி கோட்ட தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் பேபி ஷகிலா, உதவி பொதுச் செயலாளர் பி. கே. மாதவன்,திருச்சி கோட்ட செயலாளர் கரிகாலன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

