Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கன்டோண்மென்ட்மாசி சப்பாணி கருப்பணசாமி,முத்து மாரி அம்மன் கோவில் 49 ம் ஆண்டு திருவிழா.

0

'- Advertisement -

திருச்சி கண்டோன்மெண்ட் கான்வென்ட் ரோடு மாசி சப்பாணி கருப்பணசாமி,முத்து மாரி அம்மன் கோவில் திருவிழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.

திருச்சி கண்டோன்மென்ட் கான்வென்ட் ரோடு மாசி சப்பாணி கருப்பணசாமி,முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று அன்னதானம் நடைபெற்றது.

திருச்சி கண்டோன்மெண்ட் கான்வென்ட் ரோடு ஸ்ரீ ராஜகணபதி அருள்மிகு முன்னுடையான், அருள்மிகு மாசி சப்பாணி கருப்பண்ண சுவாமி, அன்னை முத்துமாரியம்மன் கோவில் 49 -வது ஆண்டு திருவிழா

கடந்த 12- ந் தேதி (வியாழக்கிழமை) முதல் மஞ்சள் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

பின்னர் 17- ந் தேதி இரண்டாம் மஞ்சள் காப்பு கட்டு நிகழ்ச்சி நடந்தது. திருத்தேர் வீதி உலா 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 12 மணிக்கு மேல் நடைபெற்றது.

இந்த தேர்த் திருவிழா பாரதிதாசன் சாலை, பிராமினேட் ரோடு, மதுரை ரோடு, மேலப்புதூர் கான்வென்ட் ரோடு வழியாக கோவிலை வந்தடைந்தது.

அதன் பின்னர் 25 – ந் தேதி (புதன்கிழமை) நாதஸ்வர மங்கள இசை நடைபெற்றது பின்னர் இரவு 9 மணிக்கு அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது விழாவின் முக்கிய நிகழ்வான குட்டி குடித்தல் விழா ஒத்தக்கடை மந்தையில் நேற்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற்றது.

முன்னதாக காலை திருச்சி நீதிமன்றம் அருகில் உய்யக்கொண்டான் சர்ப்ப நதி கரையிலிருந்து திருக்கோவிலுக்கு

மருளாளி அழைத்து வரப்பட்டார். இன்று (27- ந் தேதி) வெள்ளிக்கிழமை மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. பின்னர் நாளை 28-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் காவிரி ஆறு அய்யாளம்மன் படித்துறையில் பூவிடும் விழா நடைபெறுகிறது. பின்னர் இரவு 7:00 மணிக்கு

விடையாற்றி பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

இக்கோவில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் சிறப்பாக செய்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.