Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட ஏற்பாடுகளை அமைச்சர் நேரு நேரில் ஆய்வு.

0

'- Advertisement -

திருச்சியில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட ஏற்பாடுகளை அமைச்சர் நேரு இன்று ஆய்வு செய்தார்.

மார்ச் 9-ந் தேதி சிறுகனூரில் 12-வது திமுக மாநில மாநாடு நடைபெற உள்ளது இதனை முன்னிட்டுஅமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் ஆய்வு.

திருச்சி என்றாலே அரசியல் தலைவர்களுக்கு நினைவுக்கு வருவது மாநாடு தான். எந்த ஒரு மாநாடு நடத்தினாலும் திருச்சியில் நடத்தினால் வெற்றி மாநாடாக அமையும் என்பது எழுதப்படாத சட்டமாக இருக்கிறது.மேலும் திருச்சி தமிழகத்தின் மையப் பகுதியாக இருப்பதால் மாநாடு நடத்தினால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் எளிதாக வந்து செல்லவும், போக்குவரத்து வசதியும் சுலபமாக இருக்கும் என்று திருச்சியில் மாநாட்டை அரசியல் கட்சியினர் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகின்றனர்.பெரிய கட்சி என்றாலும் சின்ன கட்சி என்றாலும் திருச்சியில் மாநாடு நடத்தாத கட்சியை இல்லை என்று சொல்லும் அளவிற்கு அரசியல் கட்சியினர் திருச்சியில் மாநாடு நடத்தி வருகின்றனர். குறிப்பாக 5 ஆண்டுக்கு ஒரு முறை வரும் சட்டமன்ற தேர்தலுக்கு திருச்சியில் மாநாடு நடத்தி தங்களது பலத்தை நிரூபித்து சீட்டு பெறுவது காலம் காலமாகநடந்து வருகிறது என்று சொன்னால் அது மிகை ஆகாது.

சட்டப்பேரவை தேர்தலையொட்டி மார்ச் 9-ந் தேதி ‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற தலைப்பில் திருச்சியில் திமுக மாநில மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் மாநாடு கூட்டினால் திமுக-வுக்கு திருப்புமுனையாக அமையும் என்பது அண்ணா, கருணாநிதி காலம் தொட்டே இருக்கும் நம்பிக்கை ஆகும்.

அந்த வகையில், தற்போது திமுக-வின் 12-வது மாநில மாநாடு வரும் மார்ச் 9-ந் தேதி திருச்சியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. வரும் சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டமாகவே திருச்சி மாநாட்டை திமுக அறிவித்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.

தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரம்மாண்ட மாநில மாநாடு மார்ச் 9-ந் தேதி திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நடைபெற உள்ளது.

திமுகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்கிற தலைப்பில் மாநாடு மிகப்பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது.

 

திருச்சி சிறுகனூரில் நடைபெறும் இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர். தற்போது இதற்கான பிரம்மாண்ட மேடை பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளன. திருச்சி சிறுகனூரில் 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்க இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 12 -வது பிரம்மாண்டமான மாநில மாநாட்டு பணிகளை திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிகழ்வின் போது மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், தஞ்சை துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. முரசொலி எம்.பி. மாநகராட்சி மேயர் அன்பழகன், வழக்கறிஞர் பாஸ்கர் , ராஜசேகர், பொதுக்குழு உறுப்பினர் கிராப்பட்டி செல்வம் , பொருளாளர் துரைராஜ்,மத்திய மாவட்ட முன்னாள் துணை செயலாளர் குடமுருட்டி சேகர், சீனிவாச பெருமாள், கமால் முஸ்தபா உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.