Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பத்தாம் வகுப்பு பொது தேர்வு பணிகளில் உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்ய உடற்கல்வி ஆசிரியர் சங்க மாநில தலைவர் கோரிக்கை.

0

'- Advertisement -

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பறக்கும் படை உள்ளிட்ட மற்றும் அறை கண்காணிப்பாளர் பணிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் .

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனருக்கு கோரிக்கை.

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கத்திற்கு உடற்கல்வி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர்

சங்கர பெருமாள் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

மேல்நிலைப்பள்ளி பொதுத்தேர்வு மார்ச் முதல் நடைபெற உள்ளது

இந்த தேர்விற்கு அறை கண்காணிப்பாளர் மற்றும் பறக்கும் படை உறுப்பினர்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும். ஆனால் உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை தேர்வு பணியில் பறக்கும் படையினை தவிர்த்து அறை கண்காணிப்பாளர் பணியில் கடந்த சில ஆண்டுகளாக பணிநியமனம் செய்து வருகிறார்கள். ஆனால் பறக்கும் படையில் மட்டும் நியமனம் செய்வது கிடையாது எனவே .மேல்நிலைப்பள்ளி பொதுத் தேர்வில் உடற்கல்வி ஆசிரியர்கள் பறக்கும் படையில் நியமனம் செய்வதில் தகுதி இல்லை என்று நினைத்தால் அறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட எந்த தேர்வு பணியில் நியமனம் செய்ய வேண்டாம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

உடற்கல்வி ஆசிரியர்கள் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையில் பணியாற்றுவதால் அவர்களை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பறக்கும் படை உள்ளிட்ட மற்றும் அறை கண்காணிப்பாளர் பணி உள்ளிட்ட பணிகளில் நியமனம் செய்ய வேண்டும் என்று மாநிலத் தலைவர் சங்கர பெருமாள் கோரிக்கை வைத்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.