Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காஜாபேட்டை பகுதி செயலாளர் ஏற்பாட்டில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

0

'- Advertisement -

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் காஜா பேட்டை பகுதி செயலாளர் வாசுதேவன் ஏற்பாட்டில் மேலப்புத்தூர்‌ அருகே உள்ள கெம்ஸ்டவுன் பகுதியில் உள்ள ‘அன்னை இல்லத்தில் ‘ பயிலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு நேற்று இரவு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Ad banner

இந்த நிகழ்ச்சியில் இளைஞரணி செயலாளர் ரஜினிகாந்த் , ஏர்போர்ட் வடக்கு பகுதி செயலாளர் வெங்கட் பிரபு, மற்றும் அதிமுக பாஜக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.