Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கருமண்டபம் பகுதி செயலாளர் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம்.

0

'- Advertisement -

திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

 

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கருமண்டபம் பகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் மாவட்ட, கருமண்டபம் பகுதி செயலாளர் சுரேந்தர் தலைமையில் கருமண்டபத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழாவை அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடுவது, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்குவது, எதிர்வரும் தேர்தலில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் தமிழக முதல்வராக்க அயராது பணியாற்றுவது உள்ளிட்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

 

இந்த நிகழ்ச்சியில் ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளரும் முன்னாள் கோட்ட தலைவருமான ஞானசேகர்,வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஜோசப் ஜெரால்ட், ரஜினிகாந்த், ஏர்போர்ட் வடக்கு பகுதி செயலாளர் வெங்கட் பிரபு, அம்மா பேரவை இணை செயலாளர் வக்கீல் தினேஷ், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் மா.கோ.சிவக்குமார், வட்ட செயலாளர்கள் ஒத்தக்கடை மகேந்திரன், வெங்கடேஷ், கணேசன், பெருமாள், அமீர் பாஷா, அம்ஜித், மற்றும் நிர்வாகிகள் டிபன் கடை கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள்,தொண்டர்களை என பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.