Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய ஒய்வு பெற்ற அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்.

0

'- Advertisement -

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய ஒய்வு பெற்ற அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் நடைபெற்றது.

இக் கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் நாகலிங்கம் தலைமை வகித்தார். மாநில தலைமையிட செயலாளர் வேல்முருகன் வரவேற்பு உரையாற்றினார்.மாநில பொதுச்செயலாளர் சேரலாதன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் 2016 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ள

கமுட்டேஷன் பெண்டிங் – ஐ அரசு உடனே வழங்க வேண்டும். இறப்பு மற்றும் ஓய்வு கால பணிக்கொடை வழங்க வேண்டும்.

2014 முதல் வழங்கபடாமல் உள்ள விடுப்பு சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சென்னை மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், மண்டல செயலாளர் சந்திரசேகரன் உள்பட மாநில நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாநில பொருளாளர் சுந்தரம் நன்றி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.