திருச்சி: தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்க சட்டமன்ற தேர்தல் கருத்து கேட்பு சந்திப்பு கூட்டத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தல் யாருக்கு ஆதரவு என தீர்மானம்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில்
சோழிய வேளாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கு தான் ஆதரவு.
திருச்சியில் நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானம்.
தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்கம் சார்பில் சட்டமன்ற தேர்தல் கருத்து கேட்பு சந்திப்பு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் செந்தில் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் சாமிநாதன்,மாநில பொருளாளர் பேராசிரியர் மாணிக்கம்,மாநில துணை செயலாளர் பாடாலூர் மாணிக்கம், மாநில துணை தலைவர்கள் கே.பி.டி. பழனிவேல்,மகாலிங்கம்,மாநில அவைத்தலைவர் மயில் வாகனம், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் தங்க ரத்தினகுமார்,மாநகர அமைப்பாளர் திருநாவுக்கரசு,மாநில ஒருங்கிணைப்பாளர் டைமன் பாலு, மாநில அமைப்பாளர் விக்னேஸ்வரன்,,மாநில அமைப்பாளர் ரவி,வழக்கறிஞர் ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
கூட்டத்தில் மாநிலத் தலைவர் டாக்டர் செந்தில் சிறப்புரை ஆற்றினார்.பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எங்கள் சமுதாயத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கும் எங்கள் சமுதாயத்தை சேர்ந்த ஐந்து பேருக்கு சீட் வழங்கும் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்துள்ளோம்.மேலும் எங்களது கோரிக்கைகளான தூத்துக்குடியில் விமான நிலையத்திற்கு வ உ சி பெயர் வைக்க வேண்டும்.எங்களுடைய சமுதாயத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று கூறினார்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: இப்பொதுக்குழுவில் வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது, எப்படி நாம் தேர்தலை சந்திப்பது, அது சம்பந்தமாக எடுக்கும் அனைத்து முடிவுகளும் எடுக்கத் தலைவர்களின் டாக்டர் வி.ஜெ.செந்தில் பிள்ளைக்கு முழு அதிகாரம் வழங்கி இப்பொதுக்குழு ஒப்புதல் அளிக்கிறது.
நமது தலைமையை எந்த அரசியல் கட்சி அணுகி நமது சமுதாய மக்களுக்கு அதிக எண்ணிக்கையில் சீட்டும் நமது கொள்கை கோட்பாடுகளுக்கு இசைவும் தருபவருடன் கூட்டணி வைப்பது
சமுதாய மக்கள் சுமார் 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கும் அதிகமாக வாழ்கின்றனர். அந்த தொகுதிகளில் நமது சமுதாய மக்களுக்கு சீட்டுத் தர வேண்டும்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நமது குரல் ஒலிக்க வேண்டும். அதற்கு முத்தாய்ப்பாக நம் மக்கள் மிக அதிகமாக வாழும் திருச்சி கிழக்கு தொகுதிக்காக, தலைவரை அணுகி அழைக்கும் கூட்டணிக்கு நமது ஆதரவை அளிப்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை தலைவருக்கு வழங்கி இப்பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
கூட்டத்தில் மக்கள் தொடர்பு அலுவலர் வஉசி கண்ணன்,
திருச்சி மாநகர நிர்வாகிகள் சேதுராமன், சரவணன், கங்கைமணி, செல்வராஜ், விஜயக்குமார்,அரவணை செல்வம்,முகுந்தன்,முத்து,ஸ்டாலின், வரகனேரி வைரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

